ஜனவரி 31 ல் இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர்!

Share this News:

புதுடெல்லி (16 ஜன 2020): வரும் ஜனவரி 31 ஆம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பட்ஜெட் கூட்டத் தொடர் அன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.

பின்னர் பிப்ரவரி 1ஆம் தேதி 2020-2021ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இதையடுத்து அரசின் செயல்பாடுகள் மற்றும் பட்ஜெட் மீதான் விவாதங்கள் நடைபெறும். இந்த கூட்டத்தொடர் பிப்ரவரி 11ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. மேலும் இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் மார்ச் 2ஆம் தேதி மீண்டும் கூடும் என்றும் ஏப்ரல் 3-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.


Share this News:

Leave a Reply