உகாண்டா (16 ஜன 2020): உகாண்டாவில் புதுமாப்பிள்ளை தனது மனைவி ஒரு பெண்ணே அல்ல என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உகாண்டாவைச் சேர்ந்த இமாம் முகமது முடும்பா என்பவருக்கும் சுவபுல்லா நபுகீரா என்ற பெண்ணுக்கும் கடந்த 2 வாரங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவருக்கும் முதலிரவு நடைபெறவில்லை. இதற்கு பெண் அனுமதிக்கவும் இல்லை.
இந்நிலையில் முகமதுவின் பக்கத்து வீட்டுக்காரர் அவருடைய வீட்டிலிருந்து துணிகள் மற்றும் தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றை புதுப்பெண் திருடியதாக புகார் கூறியுள்ளார்.
இதையடுத்து நபுகீரா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட, அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அங்கு போலீசார் அவரை சோதனை செய்ததில் அவர் பெண்ணே இல்லை என்பதும் அவர் ஒரு ஆண் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவருடைய உண்மையான பெயர் ரிச்சர்ட் (27) என்பதும் உறுதியாகியுள்ளது.
தகவலறிந்த புதுமாப்பிள்ளை அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் திருமணமான நாள் முதல் தூங்கும்போது கூட உடலை முழுவதுமாக மறைக்கும்படியே உடை அணிந்து சுவபுல்லா தூங்கியதாக முகமது தெரிவித்துள்ளார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், முகமதுவுடைய வீட்டில் திருடுவதற்காகவே ரிச்சர்ட் பெண் வேடமிட்டு திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரைக் கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.