மே.7 ஆம் தேதி முதல் வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு!

Share this News:

புதுடெல்லி (04 மே 2020): மே 7 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ளதால் சர்வதேச விமானபோக்குவரத்தும் முடங்கியுள்ளது. இதனால், வெளிநாடுகளில் பணி மற்றும் கல்வி நிமித்தமாக சென்ற இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இவர்களை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் மத்திய அரசு இதுகுறித்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் வரும் 7 ஆம் தேதி முதல் மீட்கும் பணி துவங்கும். இவர்களில் கொரோனா பாதிப்பு அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே அழைத்து வரப்படுவார்கள். அனைவரும் இந்திய சுகாதாரத்துறையின் உத்தரவை முறையாக பின்பற்றப்பட வேண்டும்.

நாடு திரும்பும் அனைவரும் ஆரோக்கிய சேது மொபைல் செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.” என்று அறிவிப்பில் மத்திய அரசு அறிவித்துள்ளது.


Share this News: