இந்து பெண் – முஸ்லிம் இளைஞர் திருமணத்திற்கு விண்ணப்பம் – இந்து அமைப்பினர் எதிர்ப்பு!

Share this News:

பெங்களூரு (22 நவ 2022): நாடகாவின் தட்சிண கன்னடா பகுதில் இங்குள்ள சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் திருமணத்திற்கு விண்ணப்பித்த கலப்பின ஜோடிக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கலப்பின திருமணங்களுக்கு வழக்கமான நடைமுறையின் ஒரு பகுதியாக திருமணத்திற்கு ஏதேனும் ஆட்சேபனைகள் இருக்கிறதா என பதிவாளர் அலுவலகம் அழைப்பு விடுத்தது. ஆனால் இந்த திருமணத்தை லவ் ஜிஹாத் எனக்க்கூறி இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த எதிர்ப்பை பதிவு செய்ய 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.

குறிப்பிட்ட இந்து பெண் தட்சிண கன்னடாவில் உள்ள புத்தூர் நகருக்கு அருகிலுள்ள தர்பேயில் வசிப்பவர், அவர் தற்போது பெங்களூரில் தங்கியுள்ளார். அந்த நபர் பெங்களூருவில் உள்ள நயபனஹள்ளியில் வசிக்கும் 44 வயதான ஷேக் முகமது சலீம் என்பவரை திருமணம் செய்ய இருவரும் சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் திருமணத்திற்கு விண்ணப்பித்திருந்தனர்.

ஆனால் இந்த விவகாரம் குறித்து பெண்ணின் பெற்றோர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.


Share this News:

Leave a Reply