மும்பை (11 டிச 2019): குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிராவின் ஐபிஎஸ் அதிகாரி அப்துல் ரஹ்மான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
குடியுரிமை சட்டத்திருத்த இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்ட நிலையில் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படவுள்ளது.
இந்நிலையில் நாடெங்கும் இம்மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்படும் நேரடி தாக்குதல் என்று பலரும் இதனை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இம்மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகாராஷ்டிராவின் ஐபிஎஸ் அதிகாரி அப்துல் ரஹ்மான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், “இச்சட்டத்தினை கடுமையாக எதிர்க்கிறேன். இது அரசியல் சாசன சட்ட விதிமுறைக்கு முரணான சட்டமாகும். இதனால் என் பதவியை ராஜினாமா செய்வதோடு, நாளைமுதல் நான் பணிக்கு செல்வதில்லை என முடிவெடுத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.