புதுடெல்லி (09 ஆக 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா நெகட்டிவ் என செய்தி வெளியான நிலையில், இரண்டொரு நாளில் கொரோனா மறு பரிசோதனை செய்வார் என செய்திகள் வெளியாகியுள்ளன..
பாஜக எம்பி மனோஜ் திவாரி, வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்தார் என்றும், பரிசோதனையில் நெகடீவ் என வந்ததாக கூறியிருந்தார்.
இது பாஜகவினரையும், அவரது குடும்பத்தினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதற்கிடையே அடுத்த இரண்ரொரு நட்களில் அமித்ஷாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமித்ஷாவுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாத (அஸிம்டமேடிக்) தொற்று என்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.