முஸ்லிம்லீக் எம்பி குஞ்சாலி குட்டி திடீர் ராஜினாமா!

Share this News:

புதுடெல்லி (03 பிப் 2021): இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்பி பி.கே.குஞ்சாலிக்குட்டி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கேரள மாநிலம் எம்பியான குஞ்சாலி குட்டி எதிர் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக இந்த ராஜினாமாவை செய்துள்ளார். முஸ்லிம் லீக் தலைமையின் முடிவின்படி அவர் ராஜினாமா செய்துள்ளதாக குஞ்சாலி குட்டி தெரிவித்துள்ளார்.

குஞ்சாலி குட்டி தனது ராஜினாமா கடிதத்தை மக்களவை சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளார்.

குஞ்சாலி குட்டி ராஜினாமாவை அடுத்து, தற்போது இ.டி. முகமது பஷீர் எம்.பி., பி.வி.அப்துல் வஹாப் எம்.பி. மற்றும் தமிழகத்தை சேர்ந்த நவஸ்கனி எம்.பி. ஆகியோர் மட்டுமே தற்போது மக்களவையில் எம்பிக்களாக உள்ளனர்.


Share this News:

Leave a Reply