ரியாத் (04 பிப் 2021): கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அடுத்த 10 நாட்களுக்கு சவூதி அரேபியாவில் அனைத்து பொழுதுபோக்கு நிகழ்வுகளையும் மற்றும் உணவகங்களையும் நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, வியாழக்கிழமை (பிப் .4), இரவு 10 மணி முதல் நடைமுறைக்கு வரும். பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மற்றும் உலகின் சில நாடுகளைத் தாக்கியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலையை தடுக்கும் விதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. .
இடைநிறுத்தப்பட்ட நடவடிக்கைகள் பின்வருமாறு:
1. திருமணங்கள், கார்ப்பரேட் கூட்டங்கள் மற்றும் பல நிகழ்வுகள் மற்றும் விருந்துகள், விருந்து அரங்குகள் மற்றும் திருமண அரங்குகள் ஹோட்டல்களுடன் இணைந்த அரங்க நிகழ்வுகள் கூட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் வாடகை ஓய்வு இல்லங்கள் ஆகியவை 30 நாட்களுக்கு மூடப்படும் அல்லது மேலும் அது நீடிக்கப்படலாம்.
2. சமூக நிகழ்வுகளில் அதிகபட்ச கூட்டங்கள் 20 நபர்களுக்கு மேல் கூட அனுமதியில்லை
3. அனைத்து பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள்.
4. சினிமாக்கள், உட்புற பொழுதுபோக்கு மையங்கள், உட்புற விளையாட்டு அரங்கங்கள் உணவகங்கள், வணிக வளாகங்கள், ஜிம்கள் மற்றும் விளையாட்டு மையங்கள்
5: உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் பலவற்றில் சாப்பாட்டு சேவைகளை வழங்குவதை நிறுத்திவைத்தல் மற்றும் 10 நாட்களுக்கு ஒரு காலத்திற்கு எடுத்துச் செல்லும் சேவைகளை வழங்குவதை மட்டுப்படுத்துதல்.
இதை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஏற்கனவே செவ்வாயன்று முதல் 20 நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டினர் சவூதிக்குள் நுழைவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Saudi gazette