அதானி விவகாரத்தில் எஸ்பிஐ, எல்ஐசி க்கு அழுத்தம் தரப்பட்டதா? – பிரதமருக்கு ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!

Share this News:

புதுடெல்லி (19 பிப் 22023): அதானி விவகாரத்தில் பிரதமர் மவுனம் கலைக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் அதானி குழும பங்குகளில் முதலீடு செய்யும்படி எல்ஐசி, எஸ்பிஐ நிறுவனங்களுக்கு அழுத்தம் தரப்பட்டதா? எனவும் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ஜெய்ராம் ரமேஷ் தன் டிவிட்டரில், ‘‘அதானி என்டர்பிரைசஸ் பொதுப்பங்குகளில் முதலீடு செய்யும்படி பொதுத்துறை நிறுவனங்களான எல்ஐசி, எஸ்பிஐ வங்கிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதா?. இந்த விவகாரத்தில் இன்னமும் பிரதமர் மோடி அமைதியாக இல்லாமல் தனது மவுனத்தை கலைக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply