மோடி பாசிசவாதி என்பதில் மாற்றமில்லை – கவிஞர் ஜாவெத் அக்தார்!

Share this News:

புதுடெல்லி (13 பிப் 2020): பிரதமர் மோடி பாசிசவாதி என்பதில் மாற்றமில்லை. என்று பிரபல கவிஞர் ஜாவெத் அக்தார் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் ஜாவெத் அக்தார், இயக்குநர் மகேஷ் பட் உள்ளிட்டோர் பங்கேற்ற விவாத நிகழ்ச்சியில் ஜாவெத் அக்தார் மோடி பாசிஸ்டு என்பதை ஆணித்தரமாக கூறினார்.

மேலும் மோடியின் கூட்டத்தாரின் தலையில் கொம்பு முளைத்துவிடவில்லை. அவர்கள்தான் சிறந்தவர்கள் என்பது போலவும் மற்றவர்கள் அவர்களுக்கு கீழ் என்பது போலவும் நினைக்கிறார்கள். இதுவே பாஸிஸ்டு என்பதற்கு அடையாளம். மேலும் மக்கள் விரோத போக்கை யார் கையில் எடுத்தாலும் அவர்கள் பாசிஸ்டுகள்தான் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

முஸ்லிம்கள் என்றால் ஒரு அச்சம் ஏற்படுகிறதே? என்று மகேஷ்பட் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜாவெத் அக்தார், “அப்படி ஒன்றும் இல்லை. பாஜக அரசு அவ்வாறு மக்களை பயமுறுத்தி வைத்திருக்கிறது. இதற்கு ஊடகங்களும் 24 மணி நேரமும் உழைக்கின்றன. அவர்களையும் பாஜக கையில் பிடித்து வைத்து ஆட்டிப் படைக்கிறது. முஸ்லிம்களை மக்கள் வெறுக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் உயிர் நாடி. அதுதான் அவர்களின் அரசியல் தந்திரம்.” என்றார்,.

ஜாவெத் அக்தாரும், மகேஷ் பட்டும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்ப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply