டெல்லி தோல்வி எதிரொலி – பதுங்கும் பாஜக -குழப்பத்தில் அமித் ஷா!

Share this News:

புதுடெல்லி (13 பிப் 2020): டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து பாஜக தலைமை குழப்பத்தில் உள்ளது.

இன்று டெல்லி தேர்தல் தோல்வி குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சே தோல்விக்கு காரணம்” என்பதை ஒப்புக் கொண்டார். மேலும், “பாகிஸ்தான் போ, சுட்டுத் தள்ளுங்கள்” போன்ற பாஜக தலைவர்களின் வார்த்தைகளை பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

அதேவேளை குடியுரிமை சட்டம்தான் பாஜகவின் தோல்விக்கு காரணம் என்பதை ஒப்புக் கொள்ள முடியாது என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

இது இப்படியிருக்க குடியுரிமை சட்டம் குறித்து விவாதிக்க யார் வந்தாலும் அவர்களை வரவேற்போம் என்றும் அமித் ஷா கூறினார்.

இதன் மூலம் பாஜக ஒரு நிலைப்பாட்டில் இல்லை என்பதும், ஏதோ உள் குழப்பத்தில் இருக்கிறது என்பதும் தெளிவாகிறது.


Share this News:

Leave a Reply