கொரோனா பாதிப்பால் லோக்பால் உறுப்பினர் நீதிபதி ஏ.கே.திரிபாதி மரணம்!

Share this News:

புதுடெல்லி (02 மே 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் லோக்பால் உறுப்பினர் நீதிபதி ஏ.கே.திரிபாதி சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்று, இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான அஜய்குமார் திரிபாதி, கொரோனா பாதிப்புடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏப்ரல் மாதம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. சில தினங்களாக அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் இருந்தார்.

ஆனால் சனிக்கிழமை இரவில் 9 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தார். மரணம் அடைந்த ஏ.கே.திரிபாதி வயது 52. நீதித்துறை பிரமுகர்கள் பலரும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உயர் பதவியில் உள்ள ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியிருப்பது இந்தியாவில் இது முதல் முறை. இவரது மரணம் நாடு முழுவது அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.

நீதிபதி (ஓய்வு) ஏ.கே.திரிபாதி, இந்தியாவில் ஊழலை ஒழிக்க அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமைப்பான லோக்பால் அமைப்பின் உறுப்பினர் ஆவார். அவரையும் சேர்த்து மொத்தம் இந்த அமைப்புக்கு 4 உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News: