புதுடெல்லி (14 மே 2020): நேற்று முன் தினம் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் நிவாரணத் தொகையில், அரசிடம் இருந்து வரும் தொகை 4 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு.கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் 20 லட்சம் கோடி ரூபாய்க்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்த நிலையில், அரசிடமிருந்து வரும் உண்மையான நிவாரணத் தொகை 4 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே என நிபுணர்கள் கூறுவதாகத் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மீதமுள்ள தொகையில், ரிசர்வ் வங்கி 8 லட்சம் கோடி ரூபாய் வழங்கும் எனவும், கூடுதல் அரசுக் கடன் 5 லட்சம் கோடி ரூபாய் எனவும், உத்தரவாத வங்கிக் கடன் ஒரு லட்சம் கோடி ரூபாய் எனவும், நிபுணர்கள் கூறுவதாக திரு.கபில்சிபல் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.