சென்னை (18 பிப் 2020): இந்தியர்களில் முதன்மையானவர்கள் இஸ்லாமியர்கள், என்று நடிகர் எம்.எல்.ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை வண்ணரப் பேட்டை ஷஹீன் பாக் போராட்டத்தில் கருணாஸ் கலந்து கொண்டு பேசும்போது ‘ நான் அரசியல் வாதியாகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ இங்கு வரவில்லை, ஒரு மனிதனாக உங்களுடன் நிற்கின்றேன் .
இந்தியாவின் பன்முகத் தன்மை அடையாளத்தை அழிக்கும் சட்டத்தை எதிர்ப்பது நியாமான போராட்டம் என்றும், இந்தியர்களில் முதன்மையானவர்கள் இஸ்லாமியர்கள், வரலாறுகளை நீங்கள் மறைக்க முடியாது என்றும் கூறினார்.
நாளை சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறாவுள்ள நிலையில், சென்னை ஷஹீன் பாக் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்திருப்பது அரசுக்கு மேலும் நெருக்கடியை அதிகரித்துள்ளது.