ராஜஸ்தானில் காஷ்மீர் இளைஞர் அடித்துக் கொலை!

Share this News:

ஜெய்ப்பூர் (08 பிப் 2020): ராஜஸ்தானில் காஷ்மீர் இளைஞர் பாஸித் கான் (20) அவருடன் பணிபுரிபவர்களால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி ஜெய்ப்பூரில் பணிக்குச் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தபோது அவருடன் பணிபுரியும் 6 பேர் கொண்ட கும்பல் பாஸித் கானை கொடூரமாக தாக்கியுள்ளது. படுகாயம் அடைந்த பாஸித்கான் அருகில் உள்ள மருத்துவமனையில் அவருடன் சென்ற நண்பர்களால் அனுமதிக்கப் பட்டார்.

எனினும் மருத்துவர்கள் பாஸித் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாஸித்தின் தந்தை குர்ஷித் கான் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தவர். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டே உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். காஷ்மீரின் சமீபத்திய பிரச்சனையால் அங்கிருந்து ராஜஸ்தான் வந்த பாஸித் அவரது மாமா ஃபயாஸ் அஹமதுடன் தங்கியிருந்து ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply