திருவனநதபுரம் (30 ஜன 2020): கேரள மாநிலத்தில் சீனாவிலிருந்து வந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதியால் மக்கள் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில். சீனாவில் இந்த வைரசால் 170 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் சீனா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்த 800 க்கும் மேற்பட்டோர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு நடத்திய சோதனையில் சீனாவின் வுஹானிலிருந்து வந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர், தனி கண்காணிப்பு பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே கேரள முதல்வர் அவரச அமைச்சர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.