பெங்களூரு (05 செப் 2022): கர்நாடகாவில் சித்ரதுர்கா முருகா மடத் துறவி சம்பந்தப்பட்ட பாலியல் ஆடியோ ஒன்று வைரலான நிலையில் குரு மடிவாலேஸ்வரா மடத்தின் பூடாதிபதி பசவ சித்தலிங்க சுவாமிகள் அவரது ரூமில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சித்ரதுர்கா மடத்தில் பெண்களும், சிறுமிகளும் எப்படி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர் என்பது குறித்து இரு பெண்களுக்கு இடையே நடந்த உரையாடல் அடங்கிய ஆடியோ கிளிப் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த விவாதத்தில் பசவ சித்தலிங்க சுவாமிஜியின் பெயரை இரண்டு பெண்களும் எடுத்துரைத்தனர், இது அவரது நற்பெயர் மற்றும் மரியாதைக்கு களங்கம் ஏற்படுத்தியது என்று பசவ சித்தலிங்க சுவாமிகள் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பசவ சித்தலிங்க சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை மட்டத்தில் அவரது பக்தர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
வைரலாக அந்த ஆடியோவில் தன்னை தரக்குறைவாக குறிப்பிட்டு இருந்ததால் தான் வேதனை சாமியார் அடைந்துள்ளதாகவும், இனி வாழ நினைக்கவில்லை என்றும் அவர் பக்தர்களிடம் கூறியதாக விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, தற்கொலைக்கான சரியான காரணம் இன்னும் விசாரிக்கப்படவில்லை என்றும் போலீஸார் தெரிவித்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.