கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 139 பேர் பலி – திக்குமுக்காடும் மகாராஷ்டிரா!

Share this News:

மும்பை (05 ஜூன் 2020): மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 139 பேர் பலியாகியுள்ளனர்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வருகிறது. லாக்டவும் அமலில் இருந்தபோதும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை.

மேலும் நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. தலைநகர் மும்பையிலும் நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் உயிரிழப்புகளும் கூடி கொண்டே வருகிறது.

இந்தநிலையில் மராட்டிய மாநில சுகாதாரத் துறை அளித்த தகவலின்படி, மராட்டியத்தில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 139 பேர் உயிரிழந்தனர். மராட்டியத்தில் ஒரே நாளில் 2,436 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு 80,229 ஆக உயர்ந்தது. இதுவரை 2,849 பேர் பலியாகியுள்ளனர். அதே போல 35,156 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News: