குஜராத்தில் சிறுமியை வன்புணர்ந்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை!

Share this News:

தஹோட் (31 ஆக 2022): சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த நபருக்கு குஜராத் போஸ்க்கோ தனி நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 16, 2018 அன்று, குஜராத் தஹோட் மாவட்டத்தில் ஹரேஷ் பரைய்யா என்பவர் தனது இரண்டரை வயது மருமகளை அவரது நெல் பண்ணைக்கு அழைத்துச் சென்று வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளார். மேலும் சிறுமியின் உடலை பண்ணையின் புதருக்குள் போட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.

மறுநாள் காலை,காவல்துறையினரால் பண்ணையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

மருத்துவ அறிக்கைகள், சாட்சியம் மற்றும் பிற அறிவியல் சான்றுகளின் அடிப்படையில், நீதிமன்றம் ஹரேஷ் பரைய்யாவை குற்றவாளி என்று அறிவித்தது மேலும் POCSO சட்டத்தின் கீழ் அவருக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Share this News:

Leave a Reply