இந்தியா பேராபத்தில் உள்ளது – மன்மோகன் சிங் பரபரப்பு கட்டுரை!

Share this News:

புதுடெல்லி (06 மார்ச் 2020): இந்தியாவில் நடக்கும் இனப்படுகொலைகள், பொருளாதார மந்தநிலை, மற்றும் உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் உள்ளிட்டவைகளால் இந்தியா பேராபத்தில் உள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்து பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதாவது:

“சமூக ஒற்றுமையின்மை, பொருளாதார மந்தநிலை மற்றும் உலக அளவில் வேகமாக பரவி வரும் தொற்றுநோய் (கொரோனா வைரஸ்) ஆகிய மூன்று பிரச்சனைகளால் இந்தியா உடனடியாக மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளது என்று மன்மோகன் சிங் தி இந்து செய்தித்தாளில் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

நாம் நாட்டின் பிரதமராக இருந்தவர் டாக்டர் மன்மோகன் சிங். பொருளாதார நிபுணரான இவர் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தார்.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் நடந்த வகுப்புவாத கலவரம், ஏற்கனவே நிலவி வரும் பொருளாதார மந்த நிலை, உலக அளவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் போன்ற சூழல்களை குறிப்பிட்டு இந்தியா மோசமான ஆபத்தில் இருப்பதாக குறிப்பிட்டு ஆங்கில நாளிதழான இந்துவில் கட்டுரை எழுதி உள்ளார்.

சமூக ஒற்றுமையின்மை, பொருளாதார மந்தநிலை மற்றும் உலக அளவில் வேகமாக பரவி வரும் தொற்றுநோய் (கொரோனா வைரஸ்) ஆகிய மூன்று பிரச்சனைகளால் இந்தியா உடனடியாக மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ‘வெறுமனே சொற்களால்’ அல்லாமல், செயல்களால் தேசத்தை சமாதானப்படுத்த வேண்டும்.

நாம் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை பிரதமர் மோடி நிச்சயம் அறிவார், என்பதால் அவரால் முடிந்தவரை சுமூகமாக உதவ முடியும் என்ற நம்பிக்கையை இந்த தேசத்திற்கு அவர் அளிக்க வேண்டும். நாட்டில் தற்போது “கடுமையான மற்றும் மோசமான” நிலைமை ஏற்பட்டுள்ளது. இதை நான் மிகவும் கனமான இதயத்தோடு எழுதுகிறேன் … இந்த அபாயகரமான கலவையானது ( மூன்று பிரச்சனைகள்) இந்தியாவின் ஆத்மாவை சிதைப்பது மட்டுமல்லாமல், உலகில் ஒரு பொருளாதார மற்றும் ஜனநாயக சக்தியாக இருக்கும் நமது உலகளாவிய நிலைப்பாட்டைக் குறைக்கக்கூடும் என்று நான் ஆழ்ந்த கவலைப்படுகிறேன்.

டெல்லியில் “அரசியல் வர்க்கம் உட்பட நமது சமூகத்தின் கட்டுக்கடங்காத பிரிவினரால்” வகுப்புவாத பதட்டங்கள் தூண்டப்பட்டு, மத சகிப்பின்மை தீப்பிழம்பாக வெடித்தது. சட்டம் மற்றும் ஒழுங்கை காப்பற்ற வேண்டிய அரசின் நிறுவனங்கள் , குடிமக்களை காப்பாற்றாமல் தங்கள் தர்மத்தை கைவிட்டன. நீதி மற்றும் ஊடக நிறுவனங்களும் தங்கள் கடமையில் இருந்து தவறிவிட்டன. கட்டுப்பாடுகள் எதுவுமில்லாமல், சமூக பதட்டங்களின் நெருப்பு, நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. மேலும் நமது தேசத்தின் ஆன்மாவைப் பற்றிக் கொள்ள அச்சுறுத்துகிறது. அதை எரித்த அதே மக்களால் மட்டுமே அதை அணைக்க முடியும்.

சில ஆண்டுகள் முன்பு வரை உலக அளவில் பொருளாதார வளர்ச்சி நிறைந்த நாடுகளின் முன்மாதிரியாக இருந்த இந்தியா, தற்போதைய அரசின் தவறான செயல்களால் மோசமாக சரிந்து வருகிறது. பொருளாதார ஒற்றுமையின் அடிப்பகுதியான சமூக நல்லிணக்கம் இப்போது ஆபத்தில் உள்ளது. நம்முடைய சுற்றுப்புறத்தில் திடீர் வன்முறை வெடிக்கும் அபாயம் இருக்கும்போது, வரி விகிதங்களை மாற்றியமைத்தல், கார்ப்பரேட்டுகளுக்கு ஊக்கத்தொகைகளை பொழிவது அல்லது தள்ளுபடி செய்து ஆகியவை இந்திய அல்லது வெளிநாட்டு நிறுவனங்களை முதலீடு செய்யத் தூண்டாது.

நாட்டில் தற்போதைய பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் எனில் முதலில், கொரோனா வைரஸ் ( COVID-19) அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதில் அனைத்து ஆற்றல்களையும் முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இரண்டாவதாக குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் அல்லது திருத்த வேண்டும், இதன் மூலம் நச்சு சமூக சூழலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். தேசிய ஒற்றுமையை வளர்க்க வேண்டும். மூன்றாவதாக நுகர்வு தேவையை அதிகரிப்பதற்கும் பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கும் ஒரு விரிவான மற்றும் துல்லியமான நிதி ஊக்கத் திட்டத்தை ஒன்றிணைக்க வேண்டும். “

இவ்வாறு டாக்டர் மன்மோகன் சிங் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply