டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி திடீர் நீக்கம்!

Share this News:

புதுடெல்லி (02 ஜூன் 2020): டெல்லி பாஜக தலைவராக இருந்த மனோஜ் திவாரி டெல்லி பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மனோஜ் திவாரிக்கு பதிலாக, முன்னாள் வட டெல்லி மாநகராட்சி மேயரான ஆதேஷ் குப்தா டெல்லி பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2016 ல் டெல்லி பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட மனோஜ் திவாரியின் செயல்பாடுகள்தான் , பிப்ரவரி மாதம் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் படுதோல்விக்கு காரணமாக கூறப்பட்டது.

அதேபோல சத்தீஸ்கரில் விஷ்ணு தியோ சாய் தலைவராகவும், மணிப்பூரில் எஸ் திகேந்திர சிங் பாஜக தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலைவர்கள் மாற்றம் ஒரு வழக்கமான நடவடிக்கை என்று பாஜக தரப்பில் கூறபட்டுள்ளது.


Share this News: