அந்தமானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்!

போர்ட்பிளேர் (06 மார்ச் 2023): அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை 5.07 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. சமீபத்தில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

கலிபோர்னியா (20 டிச 2022): அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அதிகாலை 2.34 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சுமார் 3.30 மணியளவில் பல்வேறு இடங்களில் இருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக செய்திகள் வரத் தொடங்கின. Earthquake Strikes Northern California

மேலும்...

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

தைபே (16 டிச 2022): தைவானில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று அங்கு கிழக்கு கடலோரப்பகுதியில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவானது. இந்த நில நடுக்கம் 12 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது. பொதுவாக 6 புள்ளிகளுக்கு மேற்பட்ட நில நடுக்கங்கள் ஆபத்தானவை என்றபோதிலும், அது எங்கு தாக்குகிறது, எந்தளவு ஆழத்தில் மையம் கொள்கிறது என்பதைப் பொறுத்தது. நேற்றைய…

மேலும்...

ஈரானில் இரட்டை நிலநடுக்கம் – துபாயில் கட்டிடங்கள் குலுங்கின!

துபாய் (14 நவ 2021): ஈரானில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தை அடுத்து துபாயில் சில இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகம் துபாய், ஷார்ஜா, ராஸ் அல் கைமா மற்றும் அபுதாபியில் வசிப்பவர்கள் “இரண்டு முதல் மூன்று நிமிடங்கள்” நீடித்த நடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்தனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பல கட்டிடங்கள் காலி செய்யப்பட்டன. ஜுமைரா லேக் டவர்ஸ், நஹ்தா, டெய்ரா, பர்ஷா, துபாய் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பார்க் மற்றும் டிஸ்கவரி கார்டன்ஸ் போன்ற சமூகங்களில்…

மேலும்...

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

சுமத்ரா (03 ஆக 2021): இந்தோனேசியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் தெற்கே சுமத்ராவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி உள்ளது என ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள மென்டவாய் தீவு அருகே சுங்கா பெனு நகரின் தென்மேற்கே 191 கி.மீ. தொலைவில் 40 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்...

துருக்கியை நிலைகுலையச்செய்த நிலநடுக்கம்!

இஸ்தான்பூல் (31 அக் 220): துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 என பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்பு சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது. இங்கு 20-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து முற்றிலும் சேதடைந்தன. கட்டிட இடிபாடுகளுக்குள் பலர்…

மேலும்...

BREAKING: கர்நாடகாவில் நிலநடுக்கம்!

பெங்களூரு (05 ஜூன் 2020): கர்நாடகா மற்றும் ஜார்கண்டில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை லேசான தீவிரம் கொண்ட நிலநடுக்கம் கர்நாடகாவில் ஹம்பி மற்றும் ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் தாக்கியதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. ஜார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூரில் காலை 6:55 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.7 என்ற லேசான தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே நேரத்தில், கர்நாடகாவில் உள்ள ஹம்பியும் ரிக்டர் அளவுகோலில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை…

மேலும்...

BREAKING NEWS :துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இஸ்தான்பூல் (25 ஜன 2020): துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியின் மேற்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை இரவு 08:55 ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஈரான் லெபனான் மற்றும் சிரியாவிலும் உணரப்பட்டுள்ளது.

மேலும்...