பெண்கள் விருப்பப்படி வாழ விடுங்கள் – ஹிஜாப் விவகாரத்தில் உலக அழகி பரபரப்பு கருத்து!

Share this News:

சண்டிகர் 931 மார்ச் 2022): ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் கவுர் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.

சண்டிகரில் ​​ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஹர்னாஸ், ஹிஜாப் பிரச்சினையில் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். ஹிஜாப் பிரச்சினையை அரசியலாக்குபவர்களுக்கு எதிரிப்பு தெரிவித்த ஹர்னாஸ், ஒரு பெண் ஹிஜாப் அணிவது அவரின் விருப்பம், என்றார்.

மேலும் “பெண்கள் இஷ்டப்படி வாழட்டும். நம் பெண்கள் அனைவரும் வெவ்வேறு நிறங்கள் மற்றும் வெவ்வேறு கலாச்சாரங்களிலிருந்து வந்தவர்கள். நாம் ஒருவருக்கொருவர் ஒருவரை மதிக்க வேண்டும். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் வித்தியாசமானது. பிறகு ஏன் இன்னொருவரை வற்புறுத்தி ஆட்சி செய்யப் பார்க்கிறார்கள்?” என்று ஹர்னாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, அவரது சொந்த ஊரில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில், ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹர்னாஸ் கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டன.


Share this News:

Leave a Reply