மொராதாபாத் (18 ஜன 2020): குடும்பத்துக்கு இரண்டு குழந்தைகள் திட்டத்திற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம், மொராதாபாத் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) இல் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், நாட்டில் அதிகரித்து வரும் மக்கள்தொகை நெருக்கடியைக் கட்டுப்படுத்த ஒரு புதிய சட்டத்தை வலியுறுத்தி வரும் ஆர்.எஸ்.எஸ், ‘இரண்டு குழந்தைகள்’ கொள்கை வடிவத்தில் கொண்டு வரும் எந்தவொரு சட்டத்தையும் ஆதரிக்கும். இது காலத்தின் தேவை என்று நாங்கள் கருதுகிறோம், இருப்பினும், இது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். இந்தச் சட்டம் எந்தவொரு குறிப்பிட்ட மதத்துடனும் எந்த தொடர்பும் இல்லாமல், அனைவருக்கும் பொருந்தும் விதமாக இருக்க வேண்டும். 2 குழந்தைகள் கொள்கையை வலியுறுத்துவதே எங்களுடைய அடுத்த திட்டம் என தெரிவித்தார்.
மத்திய அரசால் குடியுரிமைத் திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிராகவும் போராட்டங்கள் நடக்கின்றன. எனினும். அதை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை.
அயோத்தி பிரச்னையில் ராமர் கோயில் அறக்கட்டளை உருவானதும் கோயில் தொடர்பான விஷயங்களிலிருந்து வெளியேறிவிடுவோம் என்றும் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.