ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்படுவது உண்மையா? – கோவில் நிர்வாகி விளக்கம்!

Share this News:

மும்பை (18 ஜன 2020): ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையறையின்றி மூட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல்களை வதந்தி எனக் கோவில் நிர்வாகம் மறுத்துள்ளது.

ஷீரடி சாயிபாபா பிறந்த இடம் பர்பனி மாவட்டம் பத்ரி என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவிலை மூடப் போவதாக செய்திகள் வெளியாகின.

இதனிடையே, ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்படமாட்டாது என்று தெளிவுபடுத்த விரும்புவதாக சாயிபாபா கோவிலின் தலைமைச் செயல் அலுவலர் தீபக் முக்லிகர் தெரிவித்துள்ளார்.

கோவில் வழக்கம்போல வரும் 19 ஆம் தேதி திறந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply