புதுடெல்லி (02 ஏப் 2023): பீகார் மாநிலம் நாலந்தாவில் ராம நவமி ஊர்வலத்தின்போது மசூதிகள் மற்றும் மதரஸாக்களுக்கு தீ வைத்த வழக்கில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராம நவமி கொண்டாட்டத்தின் போது நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த மோதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வன்முறையை தொடர்ந்து, பீகாரில் பல்வேறு இடங்களில் இணையதளம் துண்டிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
காவல்துறை, சிறப்பு அதிரடிப்படை மற்றும் துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.