நோன்பு திறக்க சென்றவர்கள் மீது ரெயிலில் தீ வைத்து படுகொலை – கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

கோழிக்கோடு (03 ஏப் 2023): கேரளா மாநிலத்தில் ஓடும் ரயிலில் பயணிகளுக்கு மர்ம நபர் ஒருவர் தீ வைத்ததில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு வந்துக்கொண்டிருந்தது. சரியாக இரவு 9.45 மணியளவில் ரயில் கோழிக்கோடு ரயில் நிலையத்தை கடந்து கோராபுழா ரயில்வே பாலத்தில் சென்றக்கொண்டிருக்கையில், மர்ம நபர் ஒருவர் ரெயிலுக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடியுள்ளார்….

மேலும்...

ராம நவமி ஊர்வலத்தில் மதரஸா மற்றும் மசூதிகளுக்கு தீவைப்பு!

புதுடெல்லி (02 ஏப் 2023): பீகார் மாநிலம் நாலந்தாவில் ராம நவமி ஊர்வலத்தின்போது மசூதிகள் மற்றும் மதரஸாக்களுக்கு தீ வைத்த வழக்கில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராம நவமி கொண்டாட்டத்தின் போது நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த மோதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வன்முறையை தொடர்ந்து, பீகாரில் பல்வேறு இடங்களில் இணையதளம் துண்டிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க…

மேலும்...

சவூதி அரேபியாவில் ஓடும் பயணிகள் பேருந்து தீ விபத்து!

ரியாத் (07 ஜன 2023): சவுதி அரேபியாவில் ரியாத் அருகே ஓடும் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது. தீ பிடித்த பேருந்து தனியாருக்கு சொந்தமானது. ரியாத்தில் இருந்து 500 கிமீ தொலைவில் உள்ள அஃபிஃப்-தாரா ஈயா சாலையில் வியாழக்கிழமை இரவு 40 பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது பஸ்சின் பின்பக்க டயர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. எனினும் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது….

மேலும்...

ஜித்தா சிட்டி பார்க் ஃபெஸ்டிவல் பூங்காவில் தீ விபத்து!

ஜித்தா (30 டிச 2022): ஜித்தா பாலஸ்தீன சாலையில் உள்ள சிட்டி பார்க் ஃபெஸ்டிவல் சிட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த பூங்காவில் வெள்ளிக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டது. மின்சார பொம்மைகள், ஆயத்த ஆடைகள் மற்றும் பிற பொருட்களை விற்கும் ஸ்டால்கள் தீயில் கருகின. இந்த தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. மேலும் பூங்கா மற்றும் அருகில் உள்ள கிடங்குகளுக்கு தீ பரவும் முன் குடிமைத் தற்காப்பு படையினர் தீயை அணைத்தனர்.

மேலும்...

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ – டெல்லியில் பரபரப்பு -VIDEO

புதுடெல்லி (29 அக் 2022): டெல்லியில் இருந்து பெங்களூரு பறக்கவிருந்த இன்டிகோ விமானத்தில் தீப்பொறி பறந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் இருந்து பெங்களூரு செல்லும் 6E-2131 இன்டிகோ விமானம் நேற்று இரவு டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. பறக்க தயாராக இருந்த விமானம் ஓடுபாதைக்கு 9.40 மணி அளவிற்கு வந்துள்ளது. 9.45 மணி அளவில் டேக் ஆப் ஆவதற்கு முழுவேகத்தில் சென்றபோது வலப்பக்க இருக்கைக்கு அருகே எஞ்சினில் திடீரென தீப்பற்றியது. டேக்…

மேலும்...

மஸ்கட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீர் தீ விபத்து!

மஸ்கட் (14 செப் 2022): மஸ்கட்டில் ஏர்ந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென தீ பற்றியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மஸ்கட்-கொச்சி இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இன்று பிற்பகல் மஸ்கட் விமான நிலையத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பயணிகள் விமானத்தில் ஏறி புறப்படும்போது இறக்கையில் இருந்து புகை கிளம்பியது. அவசர கதவு வழியாக பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மேலும்...

விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு – பாஜக அமைச்சர் மகன் மீது தாக்குதல்

பாட்னா (24 ஜன 2022): பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் பாஜக தலைவரும், மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான நாராயண் பிரசாத்தின் மகன் பப்லு குமாரை, துப்பாக்கி சூடு நடத்தியதாகக் கூறி கிராம மக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது. பீகார் மாநிலம் மொஃபுசில் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஹரடியா கோரி தோலா கிராமத்தில், அமைச்சரின் மகனை கிராம மக்கள் சிலர் தாக்குவதையும், அவர் வைத்திருந்த துப்பாக்கியை அவர்கள் பறித்துச் சென்ற காட்சிகளும் நேற்று வெளியாகின….

மேலும்...

கொரோனா சிகிச்சை மையத்தில் திடீர் தீ விபத்து – 5 நோயாளிகள் பலி!

ராஜ்கோட் (27 நவ 2020): குஜராத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5பேர் பரிதாபாமாக உயிரிழந்துள்ளனர். குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள உதய் சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்றிரவு இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம்…

மேலும்...

கப்பல் தீ விபத்தால் இலங்கைக்கு ஆபத்து!

கொழும்பு (04 செப் 2020): சரக்கு கப்பலில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் இலங்கைக்க்கு பேராபத்து காத்திருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குவைத்தின் மினா அல் அஹ்மாதி துறைமுகத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி புறப்பட்ட சரக்கு கப்பல், இந்தியாவின் பாரதீப் துறைமுகத்தை செப்டம்பர் 5 ஆம் தேதி அடையும் இலக்குடன் பயணம் மேற்கொண்டிருந்தது. இலங்கையின் கிழக்கு கடல் பகுதியில் இருந்து 38 கடல் மைல் தொலைவில் கப்பல் வந்து கொண்டிருந்தபோது அதில் தீ பற்றி…

மேலும்...

கொரோனாவை எதிர்த்து தீபாவளி – குடிசைகள் எரிந்து பயங்கர விபத்து!

ஜெய்ப்பூர் (06 ஏப் 2020): பிரதமர் மோடியின் வேண்டுகோளை அடுத்து ராஜஸ்தானில் தீபம் ஏற்றியபோது பட்டாசு வெடித்ததால் அவை குடிசைகளில் பட்டு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையில் மூன்றாவது முறையாக கரோனா குறித்து மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “வரும் ஞாயிற்றுக்கிழமை (05/04/2020) அன்று இரவு 09.00 மணிமுதல் 9 நிமிடங்களுக்கு மக்கள் அனைவரும் வீட்டில் பல்புகளை அணைத்து செல்போன் டார்ச்,…

மேலும்...