ஹிஜாபுக்கு இங்கு அனுமதி உண்டு – மும்பை கல்லூரி விளக்கம்!

Share this News:

மும்பை (10 பிப் 2022): மும்பை கல்லூரி ஒன்றில் ஹிஜாப் தடை என்ற சர்ச்சைக்கு கல்லூரி நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

‘ஹிஜாப், குங்காட், தாவணி போன்றவற்றை அணிந்த பெண் மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை’ என்று மும்பையில் உள்ள ஒரு கல்லூரி தனது விதிமுறைகளில் எழுதியதாக சர்ச்சை எழுந்தது.

தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ள கல்லூரி நிர்வாகம், விதிகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதாக கூறியுள்ளது.

கல்லூரி அறிக்கைகளின்படி, மும்பையின் மாட்டுங்கா பகுதியில் உள்ள எம்எம்பி ஷா கல்லூரியின் இணையதளத்தில், “கல்லூரியில் மாணவர்கள் பொருத்தமான ஆடைகளை அணிய வேண்டும். வளாகத்திற்குள் புர்கா/குங்காட் அல்லது தாவணி அணிவது கண்டிப்பாக அனுமதிக்கப்படாது” என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், கல்லூரி ஹிஜாப் மீதான தடையை நீக்கக் கோரி மகாராஷ்டிர உள்துறை அமைச்சருக்கு எம்எல்ஏ ரைஸ் ஷேக் கடிதம் எழுதினார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த கல்லூரி நிர்வாகம், விதிமுறைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது என்று கூறியுள்ளது.

இதுகுறித்து எம்எம்பி ஷா கல்லூரி முதல்வர் லீனா ராஜேவ் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள விளக்கத்தில், அந்தத் தகவல் உண்மைக்குப் புறம்பானது என்றும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். கல்லூரியில் ஹிஜாபிற்கு தடை இல்லை என்றும், காரணங்கள் முற்றிலும் வேறுபட்டவை என்றும் அவர் கூறினார்.

, “கல்லூரியின் இணையதளத்தில் உள்ள ப்ராஸ்பெக்டஸ் மற்றும் விதிமுறைகளில் இது எழுதப்பட்டுள்ளது. உண்மைதான் , அதற்குக் காரணம், ஆண்கள் முழு ஹிஜாப் அணிந்து கல்லூரிக்குள் வந்து மாணவிகளை துன்புறுத்துவார்கள். இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த காலத்தில் நடந்தது, எனவே இந்த இதனை கண்டிக்கும் வகையில் இவ்வாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது.” என்கிறார்.

மேலும் “கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் முஸ்லிம்கள் என்றும், ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் ஹிஜாப் அணிந்து பணிக்கு வந்ததாகவும், யாரும் அவர்களைத் தடுக்கவில்லை” என்றும் அவர் கூறினார்.


Share this News:

Leave a Reply