நிர்பயா வழக்கு – குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை நிறுத்த மீண்டும் முயற்சி!

Share this News:

புதுடெல்லி (24 ஜன 2020): நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை நிறுத்த மீண்டும் முயற்சி நடைபெற்று வருகின்றன.

டெல்லி மாணவி நிர்பயா கூட்டு வன்புணர்வு செய்யப் பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் குற்றவாளிகளில் நான்கு பேரின் தூக்குத் தண்டனை வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 6 மணிக்கு நிறைவேற்றுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

4 பேரும் தூக்குத் தண்டனையை தடுத்து நிறுத்த பல முயற்சிகள் மேற்கொண்டனர். எனினும் அடுத்தடுத்து சீராய்வு மனுக்கள், கருணை மனுக்கள் அளித்தும் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவனின் வழக்கறிஞரான ஏ.பி.சிங்., பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் இன்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், வினய் பவான் மற்றும் அக்ஷயின் சீராய்வு மற்றும் கருணை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த ஆவணங்களை திகார் சிறை நிர்வாகம் இதுவரை வெளியிடவில்லை. அதனால் அந்த ஆவணங்களில் உள்ள தகவல்கள் வெளியிடப்படும் வரை தண்டனையை நிறைவேற்றுவதற்கான நடைமுறைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.

இதனால் மீண்டும் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை தள்ளிப் போகுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


Share this News:

Leave a Reply