நிர்பயாவின் தாயார் நீதிமன்ற வளாகத்தில் கதறல்!

Share this News:

புதுடெல்லி (31 ஜன 2020): நிர்பயாவின் தாய் டெல்லி நீதிமன்ற வளாகத்தில் கதறி அழுதுள்ளார்.

நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனை மீண்டும் ஒரு முறை தள்ளிப்போனதாலேயே நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி, நீதிமன்ற வளாகத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய நான்கு பேருக்கு கடந்த ஜனவரி 22ம் தேதி டத் வாரண்ட் ( தூக்கிலிடும் தேதி) பிறப்பிக்கப்பட்டது. அப்போது முகேஷ் சிங் கருணை மனு தாக்கல் செய்த காரணத்தால் தள்ளிப்போனது. அவரது கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது.

இதற்கிடையே நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு கருணை மனுவை காரணம் காட்டி பிப்ரவரி 1ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு டத் வாரண்டை டெல்லி செசன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்தது. இந்த சூழலில் தூக்கு தண்டனையை தள்ளிப்போட பல மனுக்களை குற்றவாளிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். பவன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே இரண்டு நாளைக்கு முன்பு வினய் குமார் சர்மா குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி உள்ளார்.

இந்த வழக்கில் கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ராணா இன்று திஹார் சிறை அதிகாரிகள் மற்றும் குற்றவாளிகளின் வழக்கறிஞரின் வாதங்களை கேட்டிருந்தார். மரணதண்டனை நிறுத்தப்படுவதைக் கண்ட மூன்று கைதிகளின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டததை திகார் சிறை அதிகாரிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். ஒரு குற்றவாளியின் கருணை மனு மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும், மற்றவர்களை தூக்கிலிட முடியும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து நீதிபதி தர்மேந்தர் ராணா மறு உத்தரவு வரும் வரை 4 குற்றவாளிகளையும் தூக்கில கூடாது என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். அத்துடன புதிய டத் வாரணட் தேதி எதையும் அவர் பிறப்பிக்கவில்லை இதை கேட்டு அதிர்ச்சிஅடைந்த நிர்பயாவின் தயார் ஆஷா தேவி, நீதிமன்ற வளாகத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதார். குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏபி சிங், தூக்கு தண்டனை ஒரு போதும் நிறைவேறாது என தற்பெருமை காட்டியாதாக வேதனை தெரிவித்தார்.

நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை தொடர்ந்து தள்ளிப் போவது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply