புதுடெல்லி (15 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது.
உலகளவில் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனை அடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல மாநில அரசுகள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.
இது இப்படியிருக்க இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது.
உலக அளவில் சீனாவை அடுத்து ஐரோப்பிய நாடுகள் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளது. அதற்கு அடுத்து ஈரான் அதிக அளவில் பாதிக்கப் பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தை தாண்டியுள்ளது. 5,760 பேர் உயிரிழந்துள்ளனர்.