டெல்லி இனப்படுகொலையில் இந்துக்களுக்கு உதவிய போலீஸ் – ஆதாரத்துடன் நிரூபனம்!

Share this News:

புதுடெல்லி (15 மார்ச் 2020): டெல்லி இனப்படுகொலையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த இந்துக்களுக்கு போலீசாரே உதவியது வீடியோ ஆதாரத்துடன் நியூயார்க் டைம்ஸ் நிரூபித்துள்ளது.

டெல்லி கடந்த மாதம் நடைபெற்ற டெல்லி இனப்படுகொலையில் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டனர். 200 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். பலர் வீடுகளை இழந்துள்ளனர்.

இந்த இனப்படுகொஅலியின்போது காவல்துறையும் டெல்லி நிர்வாகமும் நடந்துகொண்ட விதம் பலராலும் கண்டிக்கப்பட்டது. டெல்லி காவல்துறை தன்னுடைய பணியை சரிவர செய்யவில்லை என உச்சநீதிமன்றம் கண்டித்திருந்தது.

இந்நிலையில் நியூயார்க் டைம்ஸ், பிபிசி உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் , டெல்லியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த டெல்லி போலீசார் இந்துக்களுக்கு உதவியதை ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளன.

அதேவேளை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் குற்றச்சாட்டை டெல்லி போலீஸ் மறுத்துள்ளதோடு, நியூயார்க் டைம்ஸுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply