அகமதாபாத் (26 மே 2020): கொரோனா வார்டில் பணிபுரிந்த நர்ஸ் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் மணிநகர் என்ற பகுதி குடியிருப்பில் வசித்து வந்த 28 வயதான நர்ஸ் சிவில் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த திங்கட்கிழமை அன்று தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் பத்தாவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து போலீசார் நர்சின் தந்தையிடம் நடத்திய விசாரணையில், “என்னுடைய மகள் திருமணமாகி சிஎம்டி காலனியில் வசித்து வந்தார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் என்னுடைய வீட்டுக்கு வந்து தங்கினார். என்னிடம் எதுவும் அவள் கூறவில்லை. எப்போதும் மன அழுதுதத்துடனே காணப்பட்டாள். அவள் தற்கொலை செய்துகொண்டதற்கு உண்மை காரணம் என்ன என்று தெரியவில்லை” என அவர் கூறினார்.
சிவில் மருத்துவமனையில் கொரோனா வார்டில் வேலை செய்து வந்த நர்ஸ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பணி ரீதியாக மன அழுத்தம் ஏற்பட்டும் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் போலீசாரிடம் எழுந்துள்ளன. போலீசார் இந்த வழக்கை சந்தேக மரணமாக பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.