பெங்களூரு (28 நவ 2022): பசியை போக்க நாணயங்களை விழுங்கிய 58 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 187 காசுகள் எடுக்கப்பட்டன.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள லிங்கசுகூரில் 58 வயது முதியவர் பசியால் நாணயங்களை விழுங்கியுள்ளார். இந்நிலையில் அவரது வயிற்றில் இருந்து 1.5 கிலோ எடையுள்ள நாணயங்களை மருத்துவர்கள் மீட்டுள்ளனர்.
ஸ்ரீகுமாரேஷ்வர் மருத்துவமனை டாக்டர்களால் அறுவை சிகிச்சையின் மூலம் முதியவரின் வயிற்றிலிருந்து காசுகளை மீட்டுள்ளனர்.
எப்போது பசியுடன் இருக்கும் அவர், ஒரு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரையிலான நாணயங்களை விழுங்குவது வழக்கம் என்று அந்த முதியவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வயிற்று வலி காரணமாக தியாமப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து ஆய்வு செய்ததில் அவரது வயிற்றில் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.