தோஹா (28 நவ 2022): கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியிலிருந்து காயம் காரணமாக சவூதி அணியின் கேப்டன் சல்மான் அல்-ஃபராஜ் விலகியுள்ளார்.
கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை போட்டியில் அர்ஜெண்டினாவுக்கு எதிரான போட்டியில் சவூதி அணியின் கேப்டன் சல்மான் அல்-ஃபராஜ் பலத்த காயம் அடைந்தார். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சை காரணமாக போட்டியிலிருந்து விலக்கப் பட்டுள்ளார்.
சல்மான் அல்-ஃபராஜ் தொடர்ந்து விளையாட முடியாது என்கிற மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் அவர் உலகக் கோப்பை போட்டியிலிருந்து விலகுவதாக அணியின் பயிற்சியாளர் ரெனார்ட்டின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அர்ஜெண்டினாவுக்கு எதிரான போட்டியில் சவூதி கோல்கீப்பர் மோதியதில் முக தாடை உடைந்து யாசர் அல்-ஷஹ்ரானியும் படுகாயம் அடைந்து ரியாத்தில் சிகிச்சை பெற்று வருவதால் வரவிருக்கும் போட்டிகளில் யாசர் அல்-ஷஹ்ரானியும் பங்கேற்கமாட்டார்.
இரு முக்கிய போட்டியாளர்கள் இல்லாததால் சவூதி அணிக்கு பின்னடைவாகவே இருக்கலாம் என கால்பந்து ஆரவலர்கள் கருதுகின்றனர்.