புதுடெல்லி (31 ஜன 2020): “டெல்லியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் உடைக்கு அடையாளம் என்ன?” என்று பிரதமர் மோடிக்கு உவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தை கொச்சை படுத்தும் வகையில் பேசியிருந்த பிரதமர் மோடி, வன்முறையில் ஈடுபடுபவர்கள் ஆடைகளை வைத்தே அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் டெல்லியில் “ஜாமியா மில்லியா பல்கலை மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதியின் உடை குறித்து அடையாளம் தர முடியுமா?” என்று பிரதமர் மோடிக்கு AMIM தலைவர் அசாதுத்தீன் உவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் உதவியற்றவர்கள் என்பதற்காகவே டெல்லி போலீசுக்கு பரிசு வழங்க வேண்டும் என்றும் உவைசி தெரிவித்துள்ளார்.