சென்னை (31 ஜன 2020): மிஷ்கின் இயக்கிய சைக்கோ படம் சமீபத்தில் வெளிவந்தது. கொடூரமான ஒரு சைக்கோ செய்யும் கொலையே கதைக்களம். இதில் என்ன லாஜிக் உள்ளது என மிஷ்கின் மீது கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இந்நிலையில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மிஷ்கின், சைக்கோ படத்தில் லாஜிக் இல்லை என்கிறார்கள், ராமாயணத்திலேயே எந்த லாஜிக்கும் இல்லை. இன்னொருவரின் மனைவியை தூக்கிச் சென்ற மோசமானவன் ராவணன். மனைவியை மீட்க ராமன் சண்டை போடுகிறான். தன் பக்கமும் நியாயம் இருப்பதாக எண்ணி ராவணனும் சண்டை போடுகிறான். விபீஷ்ணன், ராமன் கூட இணைகிறான்.
தனக்கு சாப்பாடு போட்டு உடலை வளர்த்த அண்ணன் ராவணன் கூட இருப்பேன் என்கிறான் கும்பகர்ணன். ராமனிடம் சாகப் போகிறேன் என தெரிந்தும் அண்ணன் உடன் சேர்த்து மடிந்து போவேன் என்கிறான். இவற்றில் எந்த லாஜிக்கும் இல்லை. போரில் எல்லா ஆயுதங்களும் தீர்ந்து போகிறது. இன்று போய் நாளை வா என்கிறான் ராமன். அதிலும் லாஜிக் இல்லை” என்றார்.
சைக்கோ படத்தை பற்றி கேள்வி கேட்டால் ராமாயணத்தை உதாரணம் காட்டுவதா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.