நியூயார்க் (18 மே 2021): இந்திய வகை கொரோனாவுக்கு எதிராக ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகள் செயல்படுவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
NYU கிராஸ்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் மற்றும் NYU லாங்கோன் மையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி விஞ்ஞானிகள் இதனை உறுதிபடுத்தியுள்ளனர்,
இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் கூறுகையில் ,இந்தியாவின் மாறுபட்ட வகை கொரோனாவிற்கு எதிரான செயல்களில் ” பைசர் தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், ஏனென்றால் முந்தைய மாற்றப்படாத வைரஸ் தொற்றுநோயிலிருந்து மீண்ட நபர்களிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் காணப்பட்ட சோதனைகளின்படியும், மற்றவர்களிடம் எடுக்கப்பட் ட சோதனைகளின்படியும் இதனை தெளிவுபடுத்தியுள்ளோம்.
எங்கள் ஆய்வுகளின்படி தற்போதைய தடுப்பூசிகள் இன்றுவரை அடையாளம் காணப்பட்ட மாறுபாடுகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கும் என்ற நம்பிக்கையை அளிக்கின்றன. ஆனால் இது மற்ற ஆய்வுகள் மூலம் ஆராயப்பட வேண்டும்.” என்றனர்.
Source :https://www.france24.com/en/live-news/20210517-pfizer-moderna-vaccines-effective-against-indian-variants-study