சென்னை(19 மே 2021): இந்தியாவில் கொரோனா 2-வது அலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில்தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி,
10 மாநிலங்களில் 74% புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 33,059 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவில் நேற்று 31,337 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.