திருவனந்தபுரம் (27 மே 2020): மத்திய அரசு கொரோனாவை பரப்பவே நினைக்கிறது கட்டுப்படுத்த நினைக்கவில்லை என்று கேரள முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தெரிவித்துள்ள பிணராயி விஜயன் கேரள அரசுக்கு தகவல் தராமல் வெளிமாநிலங்களில் இருந்து புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ரயில்களை அனுப்புவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடியிடம் முறையிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதில் மத்திய அரசின் அவசர நடவடிக்கைகளால் கொரோனா தடுப்பு நடவடிக்கை பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் மும்பையில் இருந்து இயக்கப்பட்ட ரெயில் கேரளாவின் கண்ணூரில் நிற்கும் என அரசுக்கு ரெயில்வே தெரிவிக்காததைச் சுட்டிக்காட்டியுள்ளார் பினராயி விஜயன்,
கொரோனா அச்சத்தால் தனிமைப்படுத்தப்படுபவர்கள் இனி அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ள அவர், வெளிநாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் லட்சக்கணக்கானோருக்கு செலவு செய்ய இயலவில்லை என தெரிவித்துள்ளார்.