ஒரே நாடு ஒரே சீருடை – பிரதமர் மோடி பரிந்துரை!

Share this News:

புதுடெல்லி (28 அக் 2022): நாடு முழுவதும் காவல்துறையினருக்கு “ஒரே நாடு, ஒரே சீருடை” என்ற யோசனையை பிரதமர் மோடி முன்வைத்தார், இது ஒரு பரிந்துரை மட்டுமே என்றும் அதை மாநிலங்கள் மீது திணிக்க முயற்சிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

மாநில உள்துறை அமைச்சர்களின் “சிந்தன் ஷிவிர்” நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி, குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளை சமாளிக்க மாநிலங்களுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் “ஒரே தேசம், காவல்துறைக்கான ஒரே சீருடை என்பது ஒரு யோசனை மட்டுமே. நான் அதை உங்கள் மீது திணிக்க முயற்சிக்கவில்லை. சற்று சிந்தித்து பாருங்கள். இது நடக்கலாம், 5, 50 அல்லது 100 ஆண்டுகளில் நடக்கலாம். சற்று யோசித்துப் பாருங்கள்” என்று மோடி கூறினார்.

நாடு முழுவதும் உள்ள காவல்துறையினரின் அடையாளம் ஒரே மாதிரியாக இருக்கலாம் என்று தான் கருதுவதாக பிரதமர் மோடி கூறினார்.

சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பின் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள பழைய சட்டங்களை மறுபரிசீலனை செய்து தற்போதைய சூழலுக்கு திருத்துமாறு மாநில அரசாங்கங்களை அவர் வலியுறுத்தினார்.


Share this News:

Leave a Reply