பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக்கிங்!

Share this News:

புதுடெல்லி (12 டிச 2021): சமூகவலைதளங்களில் ஒன்றான ட்விட்டரில், அரசியல் தலைவர்கள் முதல் முக்கிய பிரமுகர்கள் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடியும் ட்விட்டரில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு இரண்டு ட்விட்டர் கணக்குகள் உள்ளன. ஒன்று, இந்திய பிரதமரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கமாகும். அது @PMOIndia என்ற கணக்கு. மற்றொன்று பிரதமர் மோடியின் தனிப்பட்ட கணக்கான @narendramodi என்பது.

இந் நிலையில்தான் நள்ளிரவில் சில நிமிடங்கள் @narendramodi கணக்கு ஹேக் செய்யப்பட்டது. ஹேக்கர்கள் சிலர் இந்த கணக்கை சில நிமிடங்கள் முடக்கியதை பிரதமர் அலுவலக நிர்வாகிகள் கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கு உடனடியாக புகார் அளித்தனர். இதையடுத்து ஹேக் செய்யப்பட்ட பிரதமர் மோடியின் கணக்கு உடனடியாக மீட்கப்பட்டது. பிரதமரின் கணக்கை முடக்கியவர்கள் பிட்காயினுக்கு ஆதரவாக பதிவு செய்திருந்தனர். இந்தியாவில் பிட்காயினை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டதாக பதிவு செய்த அவர்களின் ட்விட்கள், பின்னர் நீக்கப்பட்டன.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் கொடுத்துள்ள விளக்கத்தில், ஹேக் செய்யப்பட்ட நேரத்தில் வெளியான பதிவுகளை கருத்தில் கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply