கொரோனாவுக்காக கோவிலில் நடந்த கொலை – கோவில் பூசாரியின் கொடூர செயல்!

Share this News:

கட்டாக் (28 மே 2020): கொரோனாவை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறி கோவிலில் வைத்து ஒருவரின் தலையை வெட்டி கொடூர கொலையை அரங்கேற்றியுள்ளார் கோவில் பூசாரி ஒருவர்.

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலின் உள்ளே புதன்கிழமை இரவு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் ஒன்றை கண்டெடுத்தனர் போலீசார். உடனே இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

கொலையானவரின் பெயர் சரோஜ் குமார் பிரதான் என்ற 52 வயது உள்ளுர் நபர் என்பது தெரிய வந்தது. இந்த கொலையை 70 வயது கோவில் பூசாரி ஓஜாதான் செய்தார் என்பதும் தெரிய வந்தது. உடனே பூசாரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அபோது பூசாரி கூறிய தகவல்தான் போலீசாரை அதிர வைத்தது. கொரோனா வைரஸை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்றால் ஒருவரை பலியிட வேண்டும் என்று சாமி கனவில் வந்து கூறியதாகவும் அதற்காகவே இந்த கொலையை செய்ததாகவும் பூசாரி போலீசாரிடம் தெரிவித்துள்ளர்.

பூசாரியை கைது செய்த போலீசார் இந்த கொலைக்கு வேறு எதுவும் காரணம் உள்ளதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News: