புதுடெல்லி (09 பிப் 2020): டெல்லி ஜே.என்.யூ மாணவர் ராகவேந்திர மிஸ்ரா என்ற இளம் சாமியார் பாலியல் வழக்கில் கைது செய்யப் பட்டுள்ளார்.
ஜே.என்.யூவில் சமஸ்கிருத பாடத்தில் பி ஹெச் டி பயிலும் ராகவேந்திர மிஸ்ரா, மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப் பட்டுள்ளார். அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
இந்துத்வா சிந்தனை கொண்ட ராகவேந்திர மிஸ்ரா, ஜே.என்.யூவில் முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராக பல தகிடுதத்தங்கள் செய்து சிக்கியவர். மேலும் முஸ்லிம் மாணவர்கள் தொழுகைக்காக பயன்படுத்தும் நூலகத்தின் ஒரு பகுதியில் மாணவர்கள் தொழ விடாமல் தடுக்கும் முயற்சி மேற்கொண்டவர்.
மேலும் மிஸ்ரா இந்து பாதுகாப்பு லீக் என்ற அமைப்பை தொடங்கியவர். கடந்த ஜே.என்.யூ மாணவர் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.