பாரத் ஜோடோ யாத்திரையில் கிரிக்கெட் விளையாடிய ராகுல் காந்தி – வீடியோ!

Share this News:

ஐதராபாத் (03 நவ 2022): இந்திய தேசிய காங்கிரஸ் (INC) நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு சிறுவனுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், ஜெர்சி அணிந்த சிறுவனுடன் கிரிக்கெட் விளையாடிய ராகுல் காந்தி. அந்த சிறுவனின் பேட்டில் ராகுல் காந்தி கையெழுத்திட்டு, பந்துவீசுவதையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவதுடன் வீடியோ முடிகிறது.

இந்தியாவை ஒருங்கிணைக்கும் நோக்கில் காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரை செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கப்பட்டது. கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய யாத்திரை தற்போது தெலுங்கானாவில் உள்ளது.

இந்த யாத்திரை 12 மாநிலங்கள் வழியாகச் சென்று, ஜம்மு மற்றும் காஷ்மீரில் முடிவடையும் – சுமார் 150 நாட்களில் கிட்டத்தட்ட 3,500 கி.மீ வரை இந்த பயணம் தொடரும்.


Share this News:

Leave a Reply