புதுடெல்லி (27 ஏப் 2020): நாட்டில் தினந்தோறும் 1 லட்சம் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று திரு. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் தினந்தோறும் 1 லட்சம் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று திரு. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவில் தற்போது நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் பரிசோதனைகளே மேற்கொள்ளப்படுவதாகவும், குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பரிசோதனைகளாவது மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதற்கு தேவையான கருவிகள் நம்மிடம் இருப்பதால், பிரதமர் இது தொடர்பாக விரைந்து செயல்பட்டு நடவடிக்கை வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்