புதுடெல்லி (27 ஏப் 2020): ஊரடங்கை மீண்டும் நீட்டிப்பது குறித்து, மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், அடுத்த மாதம் 3-ம் தேதி வரை, நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து, பிரதமர் மோடி, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை நடத்தினார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆந்திரா, தெலங்கானா மாநில முதலமைச்சர்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
இந்த ஆலோசனையின்போது மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.