மும்பை (27 நவ 2022): மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூரில் உள்ள பலார் ஷா ரயில் நிலையத்தில் உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்தது.
நடைமேடை எண் 1 மற்றும் நடைமேடை எண் 4 ஆகியவற்றை இணைக்கும் பாலம் இன்று இடிந்து விழுந்தது. மாலை 5.10 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
பாலம் இடிந்து ரயில் பாதையில் இருபது அடி உயரத்தில் இருந்து மக்கள் விழுந்தனர். அப்போது அந்த பாதையில் ரயில்கள் எதுவும் ஓடாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 1 லட்ச ரூபாயும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.