புதுடெல்லி (19 பிப் 2020): அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளைக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, 15 பேர் கொண்ட அறக்கட்டளையை, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. அதன் முதல் கூட்டம், டெல்லியில் நடைபெற்றது. அதில், அறக்கட்டளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதன்படி, . பிரதமர் மோடியின் முன்னாள் முதன்மை செயலர் நிருபேந்திர மிஸ்ரா, கோவில் கட்டுமானக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.மகந்த் நிருத்ய கோபால் தாஸ் அறக்கட்டளையின் தலைவராகவும், சம்பத் ராய் பொதுச் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அறக்கட்டளையின் பொருளாளராக, புனேயைச் சேர்ந்த சுவாமி கோவிந்த் தேவ் கிரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.