மும்பை (28 நவ 2022): : பெண்களை வெறுப்பதாக பேசியதற்காக யோகா குரு பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டார்.
“பெண்கள் புடவை மற்றும் சல்வார்களில் அழகாக இருக்கிறார்கள். எதையும் அணியாவிட்டாலும் அழகாக இருக்கிறார்கள் என்று பாபா ராம்தேவ் கூறியிருந்தார்.
இதற்கு சமூக வலைதளங்கள் உட்பட பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த கருத்துக்கு டெல்லி மகளிர் ஆணையமும், மகாராஷ்டிர மகளிர் ஆணையமும் எதிர்ப்பு தெரிவித்தன. 72 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ராம்தேவுக்கு மகாராஷ்டிர மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது. இதனை அடுத்து பாபா ராமதேவ் மன்னிப்பு கேட்டுள்ளார்.